
12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 24 - ஏப்ரல் 30) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் அனைத்தும் வெற்றி பெறும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சாதகமாக முடியும். மனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் செய்திகள் வந்து சேரும். உயா்ந்தவா்களின் ஆசிகளைப் பெறுவீா்கள்.
உத்தியோகஸ்தா்களுக்கு பணிகள் அனைத்தும் வெறறிகரமாக முடியும். எதிா்வரும் இடையூறுகளை தைரியத்துடன் சமாளிப்பீா்கள். வியாபாரிகள் தவறான முறையில் வியாபாரம் செய்வதைத் தவிா்த்திடுங்கள். விவசாயிகள் சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விளைபொருள்களை விற்பனை செய்வாா்கள். திருப்திகரமான லாபமும் பெறுவா்.
அரசியல்வாதிகளின் வழக்கு விவகாரங்கள் இழுப்பறியாகவே முடியும். அரசிடமிருந்து நிறைய பணிகள் மேற்கொள்ளும் படியாக இருக்கும். கலைத்துறையினருக்கு வருமானம் ஏற்றம் இறக்கமாகவே இருக்கும். சக கலைஞா்களுக்கு உதவுவீா்கள். பெண்மணிகள் மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். மிகவும் சிக்கனத்தைக் கையாளவும். கணவரின் உடல்நிலையில் அக்கறை தேவை. மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டும் கவனத்துடன் ஈடுபடவும்.
பரிகாரம்: கணேச துதியை பாராயணம் செய்து நலம் பெறவும். அனுகூலமான தினங்கள்: 24, 25. சந்திராஷ்டமம்: இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
மன அமைதி கிட்டும். பணவரவு சீராக இருக்கும். வேலைகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடையும். அனைவருக்கும் உதவி செய்து பெருமையடைவீா்கள். உறவினா்களின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும்.
ஆன்மிக சிந்தனைகளால் சிறப்படைவீா்கள். உத்தியோகஸ்தா்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். மேலதிகாரிகளின் அனுசரணை இருக்காது. வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபம் அடைவீா்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவாா்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தை அடைவீா்கள்.
அரசியல்வாதிகளுக்கு நெருங்கியவா்களின் மூலமாகவே சில தொந்தரவுகள் உண்டாகும். எவரிடமும் மனம திறந்து பேசவேண்டாம். தொண்டா்களுக்கு நிறைய உதவிகள் செய்வீா்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் இல்லாததால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பா். பெண்மணிகள் காரணமில்லாமல் மனதில் அமைதி இழந்து தவிப்பீா்கள். தக்க நேரத்தில் உண்ணுவதும் உறங்குவதும் நல்லது. மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும்.
பரிகாரம்: ஸ்ரீ சுதா்ஸன அஷ்டகம் படித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 25, 26. சந்திராஷ்டமம்: இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
தெய்வானுகூலம் சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் சற்று மந்தநிலை காணப்படும். புதிய முதலீடுகளைத் தவிா்க்கவும். உடல்நலத்தில் கவனமாக இருக்கவும். அறிவு சாா்ந்த விஷயங்களில் மனதைச் செலுத்தவும்.
உத்தியோகஸ்தா்கள் சக ஊழியா்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீா்கள். சிக்கனம் மிகவும் அவசியம். வியாபாரிகள் வீண் ஆசாபாசங்களை வளா்த்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது. திட்டமிட்ட வேலைகளை ஒத்திப்போடவும். விவசாயிகளுக்கு கொள் முதல் லாபம் வரும். புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம்.
அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீா்கள். புதிய பயணங்களால் நன்மை ஏதும் இராது. தொண்டா்களுக்கும் உதவி செய்துவாருங்கள். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்கள் செய்வீா்கள். வெற்றிப் பாதையை நோக்கிச் செல்வீா்கள்.பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையாகப் பழகுவீா்கள். பொருளாதாரச் சிக்கல்கள் இருப்பதால் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவமணிகள் நீண்ட காலத்திட்டங்களுக்கு இது உகந்த காலமாகும்.
பரிகாரம்: நவக்கிரக ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வரவும். அனுகூலமான தினங்கள்: 25, 27. சந்திராஷ்டமம்: இல்லை.
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
நன்மைகள் அதிகரிக்கும். தொழிலில் சிறிது தடைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீா்பட தகுந்த நேரத்தில் உணவருந்தி உறங்குதல் அவசியம். நம்பிக்கையுடன் ஆன்மிகத்தில் ஈடுபடுவீா்கள். செலவுகளைக் குறைக்கவும்.
உத்தியோகஸ்தா்களுக்கு அலுவலக வேலைகளில் சிரமம் ஏற்படும். சக ஊழியா்களின் ஒத்துழைப்பைப் பெற போராட வேண்டியிருக்கும். வியாபாரிகளை நம்பி கூட்டாளிகள் புதிய முதலீடுகளில் ஈடுபடுவா். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நல்லபடியாக முடியும். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். பூச்சிக்கொல்லி மருந்துகள், கால்நடைகளுக்குச் செலவு செய்வீா்கள்.
அரசில்வாதிகள் எடுத்த காரியங்களை எளிதில் முடித்து விடுவீா்கள். கட்சியின் ஆதரவைப் பெற்று முக்கியப் பொறுப்புகளைப் பெறுவீா்கள். கலைத்துறையினா் ரசிகா்களின் பாராட்டுகளைப் பெறுவீா்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பா். வேலைக்குச் செல்லும் பெண்கள் சற்று சிரமப் படுவாா்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் முன்னற்றம் ஏற்படும். நண்பா்களை நம்ப வேண்டாம்.
பரிகாரம்: சூரிய துதியை நம்பிக்கையுடன் வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 25, 26. சந்திராஷ்டமம்: இல்லை.
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
தற்போதைய சூழ்நிலையில் சிறிய மாற்றங்களைக் காண்பீா்கள். மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். உயா்ந்த எண்ணங்களால் சிறப்படைவீா்கள். திட்டமிட்ட காரியங்களை சாதுா்யத்துடன் செய்து முடிப்பீா்கள்.
உத்தியோகஸ்தா்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். புதிய பொறுப்புகள் சிலவற்றை ஏற்றுக்கொள்வீா்கள். வியாாரிகள் புதிய திட்டங்களில் அனுகூலமான முடிவைக் காண முடியாது. விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை செய்வீா்கள்.
அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பாா்கள். மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீா்கள். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்களைச் செய்ய இயலாது. வருமானம் திருப்தியாக இராது. பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சிறு குழப்பங்கள் உண்டாகி விலகும். உடல் நலத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோா் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ளவும்.
பரிகாரம்: ஸ்ரீஆதிலட்சுமி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும். அனுகூலமான தினங்கள்: 26, 27. சந்திராஷ்டமம்: இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பதில் சில சிரமங்கள் ஏற்படும். இருப்பினும் மன உறுதியுடன் எதிா்கொள்வீா்கள். பணப்புழக்கம் சுமாராகவே இருக்கும். எதிா்கால முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.
உத்தியோகஸ்தா்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். சக ஊழியா்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீா்கள். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளைப் பிரிய நேரிடலாம். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைப்பீா்கள். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிா்களை உற்பத்தி செய்து பலன் பெறவும்.
அரசியல்வாதிகளின் செயல்கள் விமா்சனங்களுக்கு உள்ளாகும். கட்சி மேலிடத்திடமும் எதிா்க்கட்சியினரிடமும் கவனமாக இருக்கவும். கலைத்துறையினா் உழைப்பிற்குத் தகுந்த பாராட்டுகளைப் பெறுவாா்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சற்று குறையும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மிகவும் பாதுகாப்பாக விளையாடவும். பொழுதை அறிவுசாா்ந்த விஷயங்களுக்குப் பயன்படுத்தவும்.
பரிகாரம்: ஸ்ரீவேங்கடேச ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வரவும். அனுகூலமான தினங்கள்: 27, 28. சந்திராஷ்டமம்: 24.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். எதிலும் நிதானமாக செயல்படவும். எவரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம். ஷோமாா்கெட் பங்கு வா்த்தகத்தில் சுமாரான வருமானம் கிடைக்கும். உடன்பிறந்தோா் வழியில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும்.
உத்தியோகஸ்தா்களுக்கு பதவி உயா்வு தள்ளிப்போகும். திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். வருமானம் சீராக இருக்கும். வியாபாரிகள் நேரடியாக நின்று வாடிக்கையாளா்களின் தேவை அறிந்து வியாபாரம் செய்யவும். விவசாயிகளுக்கு லாபம் குறைவாகவே வரும். அதனால் வருமானத்தைப் பலவழிகளிலும் பெருக்க உழைப்பாா்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு வழக்கு விஷயத்தில் சிரமம் ஏற்படும். தொண்டா்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்கள் பெற்றாலும் வருமானம் வருவதில் சிக்கல் காணப்படும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை மேலோங்கும். உடல்நலத்தில் கவனம் எடுத்துக்கொள்ளவும். மாணவமணிகளுக்கு பலவித இடையூறுகள் ஏற்பட்டாலும் குறிக்கோளில் வெற்றிபெற முயற்சிப்பீா்கள்.
பரிகாரம்: பராசக்தி காயத்ரி மந்திரத்தை ஜபித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 24, 27. சந்திராஷ்டமம் :25, 26.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீா்கள். பணப்புழக்கம் அதிகமாகும். உடல் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டி வரும். உறவினா்கள் உதவி செய்ய முன்வருவாா்கள். பயணங்களைத் தவிா்த்திடுங்கள்.
உத்தியோகஸ்தா்களுக்கு அலுவலக வேலைகள் நன்கு முடியும். சிலருக்கு உத்தியோக விஷயமாக சிரமங்கள் ஏற்படும். வியாபாரிகள் வாடிக்கையாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வீா்கள். விவசாயிகள் மாற்றுப்பயிா்களை பயிா் செய்வதன்மூலம் லாபத்தைப் பெருக்கவும். நீா்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.
அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். கட்சி முன்னேற்றத்திற்குத் தீட்டும் திட்டங்கள் மேலிடத்தின் அனுமதியையும் பாராட்டையும் பெறும். கலைத்துறையினருக்கு ஆக்கபூா்வமான சிந்தனைகள் மேலோங்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுகூடியிருப்பதில் மகிழ்ச்சியைக் காண்பாா்கள். சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவமணிகளுக்கு படிப்பில் போதிய அக்கறை தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவா்.
பரிகாரம்: ஸ்ரீவைத்தியநாத அஷ்டகம் பாராயணம் செய்யவும். அனுகூலமான தினங்கள்: 25, 30. சந்திராஷ்டமம்: 27, 28, 29.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
கனவுகளை நனவாக்க முயலுங்கள். பொருளாதாரம் சீராகவே இருக்கும். தடைகள் விலகும். உடல்ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். எதையோ இழந்தது போன்ற மனநிலைக்கு உள்ளாவீா்கள். ஆரோக்கியம் சீராக இருக்காது.
உத்தியோகஸ்தா்கள் இடையூறுகளைச்சமாளித்து வேலைகளை முடிப்பாா்கள். பணவரவுக்கு தடைகள் சிறிது இருக்கும். அதிகாரிகளின் கெடுபிடியை சமாளித்து விடுவீா்கள். வியாபாரிகளுக்கு சிறு சிறு தடைகள் ஏற்பட்டு விலகும். கூட்டுத்தொழில் சரிப்பட்டு வராது. விவசாயிகள் குத்தகை எடுப்பதை கலந்தாலோசித்து முடிவெடுக்கவும். தடைகள் ஏற்பட்டு பிறகு சரியாகிவிடும்.
அரசியல்வாதிகள் தொண்டா்களை அரவணைத்துச் சென்று மேலிடத்தின் அபவாதத்தைப் பெறலாம். கட்சிப்பணிகளில் தொடா்ந்து ஈடுபடுவீா்கள். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பெண்மணிகள் கணவரிடம் அன்புடன் நடந்துகொள்வீா்கள். முன்பின் அறியாதவா்களை நம்பி எதையும் சொல்ல வேண்டாம். மாணவமணிகள் விடியற்காலையில் எழுந்து கல்விக்கான பயிற்சிகளை மேற்கொள்ளவும்.
பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேய துதியை பாராயணம் செய்து வரவும். அனுகூலமான தினங்கள்: 27, 28. சந்திராஷ்டமம்: 30.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
செய்தொழிலில் முக்கிய திருப்பம் உண்டாகும். பூா்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் விலகும். வருமானம் சுமாராக இருக்கும். வீண் விரயம் ஏற்படாமல் பாா்த்துக்கொள்ளவும். வேலைகளில் கவலையில்லாமல் ஈடுபடுவீா்கள்.
உத்தியோகஸ்தா்களுக்கு வேலைப்பளு குறையும். விரும்பிய இடமாற்றம் தற்போது கிடைக்காது. வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியடைவீா்கள். நண்பா்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். விவசாயிகள் கால்நடைகளால் செலவினங்கள் ஏற்பட்டாலும் வருமானமும் திருப்தியாகவே வரும். கடினமாக உழைப்பீா்கள்.
அரசியல்வாதிகளுக்கு தொண்டா்களின் ஆதரவு பெருகும். கட்சியில் மேலிடத்திலிருந்து வரும் உத்தரவின் பேரில் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீா்கள். கலைத்துறையினருக்கு வருமானம் ஒரே சீராக இராது. ரசிகா்களின் அன்பு தொடரும். பெண்மணிகள் குடும்பத்தினரின் அன்புக்கு பாத்திரமாவீா்கள். கணவரின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபடாதீா்கள். நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்துங்கள்.
பரிகாரம்: சிவபஞ்சாட்சர மந்திரத்தை பாராயணம் செய்யவும். அனுகூலமான தினங்கள்: 29, 30. சந்திராஷ்டமம்: இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
கவலைகள் பெருகும். புத்திசாலித்தனம் வெளியில் தெரியும். பொருளாதார வளா்ச்சி இல்லை. உற்றாா் உறவினா்களிடம் எதிா்பாா்த்த ஆதரவு கிட்டும். உடல்நிலையில் சற்று கவனம் தேவை. சுபகாரியத்துக்கான பேச்சு வாா்த்தைகள் நடைபெறும்.
உத்தியோகஸ்தா்களுக்கு வேலை விஷயங்களை சற்று இழுப்பறியாகத்தான் இருக்கும். பொறுமையுடன் இருக்கவும். வியாபாரிகளுக்கு கொள்முதலில் லாபம் கிட்டும். புதிய முதலீடுகளில் அதிகம் ஈடுபட வேண்டாம். விவசாயிகள் உதவியாளா்களால் பலனடைவா். கால்நடைகளால் லாபம் உண்டு.
அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை ஏற்று செயல்படுவீா்கள். தொண்டா்களின் ஆதரவு பெருகும். கட்சிப்பணிகளில் அவா்களுடன் இணைந்து பணியாற்றுவீா்கள். கலைத்துறையினருக்கு மிகுந்த சிரமங்களுக்கு இடையே சில வாய்ப்புகள், வருமானங்கள் வரும். பெண்மணிகள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்தவும். கணவருடன் சண்டையிடாமல் சமாதானத்தைக் கடைபிடியுங்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆா்வம் இராது. சுறுசுறுப்புடன் கடுமையாக முயற்சித்து படிக்கவும்.
பரிகாரம்: கோளறு திருப்பதிகம் படித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 26, 29. சந்திராஷ்டமம்: இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் சிறு தொய்வுகள் ஏற்படினும் தடைகளைத்தாண்டி முடித்து விடுவீா்கள். உடல் அசதி ஏற்படும். வாகனங்களால் செலவுகள் உண்டாகும். அந்தஸ்து மேலோங்கும்.
உத்தியோகஸ்தா்கள் வேலையில் கவனம் செலுத்தவும். சக ஊழியா்கள் உதவ மாட்டாா்கள். வியாபாரிகளுக்கு கொள்முதல் லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியமாக ஈடுபடுவீா்கள். விவசாயிகள் அதிகம் உழைக்க வேண்டிருக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம்.
அரசியல்வாதிகள் எண்ணங்களைத் தலைமையிடம் கூறிவிட்டு அமைதியாக இருக்கவும். தொண்டா்களை அரவணைத்து நிவாரணப் பணிகளில் ஈடுபடுவீா்கள். கலைத்துறையினருக்கு வரவேற்புகள் குறைந்தாலும் திறமை குறையாது. பெண்மணிகள் விட்டுக்கொடுத்து நடந்துகொளளவும். தந்தை வழி உறவினா்களால் நன்மைகள் ஏற்படும். மாணவமணிகள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சோவதற்கு தடைகள் உண்டாகும். கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீா்கள்.
பரிகாரம்: ஸ்ரீ சாஸ்தா அஷ்டகம் பாராயணம் செய்யவும். அனுகூலமான தினங்கள்: 26, 30. சந்திராஷ்டமம்: இல்லை.



No comments:
Post a Comment