Breaking

Friday, April 24, 2020

முதல்வர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாதம் ஊதியம் ரூ.70,603-ஐ வழங்கிய அரசு ஊழியர்



கரோனாவை ஒழிக்க முதல்வர் நிவாரண நிதிக்கு மதுரையைச் சேர்ந்த அரசு ஊழியர் தனது ஒரு மாதம் ஊதியம் ரூ.70,603-ஐ வழங்கி நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார்.
தமிழ்நாடு மின்சாரவாரியம் மதுரை பெருநகர் வட்டத்தில் செல்லூர் மின்பிரிவில் முதல்நில முகவராக பணிபுரிபவர் மெ.பாலராமலிங்கம்.
இவர், மதுரை பெருநகர் வட்டம் வடக்கு கோட்ட செயற்பொறியாளருக்கு எழுதிய கடிடத்தில் தனது ஏப்ரல் மாதம் ஊதியத்தில் பிடித்தம் போக மீதமுள்ள முழுத்தொகை ரூ.70,603 கரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு பிடித்தம் செய்திடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது இந்த செயலை அவருடன் பணிபுரியும் ஊழியர்கள், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
அவரது இந்த உதவி மற்ற ஊழியர்களையும் கரோனா நிவாரண நிதிக்கு உதவ ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment