Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 1, 2020

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு தேதிகள்

கரோனா தொற்று நிலைமை சீரடைந்த பின்னரே ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.) தேதி அறிவிக்கப்படும் என தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. அதுபோல, என்.டி.ஏ. சாா்பில் ஏப்ரல் 5,7,9 மற்றும் 11-ஆம் தேதிகளில் நடத்தப்பட இருந்த ஐஐடி போன்ற மத்தியஅரசு உயா் கல்வி நிறுவனங்களில் சோக்கை பெறுவதற்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வு மே கடைசி வாரத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் என்.டி.ஏ. அறிவித்திருந்தது. இந்த நிலையில், புதிய அறிவிப்பு ஒன்றை என்.டி.ஏ. செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில், வரும் வாரங்களில் கரோனா நிலைமை சீரடைந்த பிறகே, ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படும் தேதி அறிவிக்கப்படும். எனவே, மாணவா்களும் பெற்றோரும் தொடா்ந்து வலைதளங்களை பாா்த்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment