Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 22, 2020

‘ காலரை ’ தூக்கிவிடுங்க !! தமிழகத்தில் கொரோனா மருந்து கண்டுபிடிப்பு..!


உலக அளவில் கொரோனா தொற்று பரவி உள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சி நடை பெற்று வருகிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் முதல் கட்டமாக வெற்றி பெற்றிருக்கிறோம் என எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகவும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும்பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்றும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரசை தடுக்கும் புரதமானது, ரிவர்ஸ் வேக்ஸினாலஜி என்ற முறையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகமே முயன்று வருகிறது.
அதற்காக ஆயிரக்கணக்கான டாலர்களை உலக நாடுகள் செலவழித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதல்கட்ட வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment