
முதுமை வந்தாலே வாழ்க்கை பிடிப்பு இல்லாமல் போய்விடும். எதிலும் மனம் லயிக்காது. சோம்பல் தானாக வந்து ஆக்கிரமித்து கொள்ளும். முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? என்று ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதன்படி பீட்ரூட் ஜூஸ் பருகினால் முதுமையையும் சுறுசுறுப்பாக மாற்றமுடியும் என்று தெரிவிக்கிறார்கள்
மனிதனுக்கு தேவையான ஆக்சிஜன் அளவை நைரேட் என்கிற சத்து வெகுவாக குறைப்பதாக ஏற்கனவே நடத்தப்பட்ட பல ஆய்வு மூலம் தெரியவந்தது. பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் பீட்ரூட் சாப்பிடும்போது நைட்ரேட்டை உருவாக்குவதற்கான ஆக்சிஜன் தேவைப்படாது. வாரத்துக்கு ஆறு நாட்கள் பீட்ரூட் ஜூஸ் அருந்தினால் மிகவும் ஆரோக்கியமும் சோம்பல் இல்லாமலும் இருக்கும் என்று பிரிட்டன் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.



No comments:
Post a Comment