Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 23, 2020

இந்த லிங்க்கின் மூலம் மாணவர்கள் எளிமையாக கல்வி கற்கலாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்!



கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், முதல் கட்ட தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பள்ளிகள் மேலாக மூடப்பட்டுள்ளதால், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் அடுத்த கல்வியாண்டிற்கான புத்தகங்கள் இன்னும் அச்சடிக்கப்படாததால், இ-புத்தகம் வடிவில் பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வந்தது. மாணவர்களுக்கான புத்தகங்கள் அச்சிடப்படுவது கடந்த மார்ச் மாதமே துவங்கியிருக்க வேண்டும். ஆனால், கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக அச்சகங்கள் ஏதும் செயல்படவில்லை. அதனால் மாணவர்களுக்கு இ-புத்தகம் வடிவில் பாடப்புத்தகங்கள் கொடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன் படி மாணவர்களின் புத்தகங்களை டவுன்லோட் செய்து கொள்வதற்கான லிங்க் நேற்று வழங்கப்பட்டது.
இந்நிலையில், மாணவர்கள் இந்த விடுமுறையை வீணாக செலவழிக்காமல் இணைய தளம் மூலம் கல்வி கற்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. e-learn.tnschool.gov.in என்னும் இந்த தளத்தின் வழியாக மாணவர்கள் வீட்டிலிருந்தே எளிமையாக கல்வி கற்க ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மாணவர்கள் இதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment