Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 23, 2020

கேரளாவில் அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு முடிவு !!??


கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வர்களின் பொது நிவாரண நிதி மூலம் நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது. இதற்கு பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சம்பளத்தை 5 தவணைகளாக, அதாவது ஒவ்வொரு மாதமும் 6 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பிடித்தம் செய்யப்பட்ட சம்பளம் அவர்களுக்கு திருப்பிச் செலுத்தப்படும். இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment