Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 14, 2020

முருங்கை இலையில் நிறைந்துள்ள எண்ணற்ற நன்மைகள்!



கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.
முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
உடலில் வாத தன்மை அதிகரிக்கும் போதும், கடின உழைப்பில் ஈடுபட்ட பின்பும் சிலருக்கு உடல் மற்றும் கை கால்களில் வலி ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை உருவி, அதன் காம்புகளை நீக்கிவிட்டு, அந்த முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும்.
நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும்.
முருங்கைக்கீரையில் தோல் வியாதிகள் மற்றும் இதர தோல் சம்பந்தமான குறைபாடுகளை போக்க உதவும் வைட்டமின்கள், புரத சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன. முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது.

No comments:

Post a Comment