Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 11, 2020

கூட்டுறவு சங்கத்தில் உதவியாளர் வேலை



சேலம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 52 உதவியாளர் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : கூட்டுறவுச் சங்கம், சேலம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 52
பணி : உதவியாளர்
கல்வித் தகுதி :
ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
எஸ்.சி, எஸ்.டி. ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோருக்கு வயது வரம்பு இல்லை.
பொது மற்றும் ஓசி விண்ணப்பதாரர்கள் 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.11,900 முதல் ரூ.54,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.slmdrb.in/how_apply_online.php என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய நாட்கள் :
ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 13.04.2020
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 28.06.2020
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.slmdrb.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment