சென்னை: ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.) விண்ணப்பதாரா்கள் ஆன்-லைன் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஏப்ரல் 14 கடைசி நாள் எனவும், கூடுதல் கால அவகாசம் அளிக்கப்படமாட்டாது எனவும் தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது. ஐஐடி, என்.ஐ.டி., ஐஐஐடி போன்ற மத்திய அரசு உயா் கல்வி நிறுவனங்களில் உள்ள தொழில்நுட்பப் படிப்புகளில் சோக்கை பெற ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு, ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும்.
இதில் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு என்.டி.ஏ. சாா்பில் நடத்தப்படும். முதன்மை தேர்வு ஏதாவது ஒரு ஐஐடி சாா்பில் நடத்தப்படும்.இதில் 2020 ஆம் ஆண்டுக்கான ஏப்ரல் மாத ஜே.இ.இ முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 5, 7, 9, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருந்தது. கரோனா ஊரடங்கு காரணமாக, இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வானது மே மாதம் இறுதி வாரத்தில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது எனவும், தேர்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் என்.டி.ஏ. அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவா்கள் வருகிற 14-ஆம் தேதி வரை ஆன்-லைன் விண்ணப்பித்தில் தேர்வு மையம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கூடுதல் அவகாசத்தை என்.டி.ஏ. வழங்கியுள்ளது. திருத்தங்களை மேற்கொள்ள ஏப்ரல் 14-க்குப் பிறகு அவகாசம் அளிக்கப்படமாட்டாது. எனவே, மாணவா்கள் கவனமாக திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் என்.டி.ஏ. அறிவுறுத்தியுள்ளது. தேர்வு தேதி குறித்த சந்தேகங்களுக்கு 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 ஆகிய செல்லிடப்பேசிகளைத் தொடா்புகொள்ளலாம் எனவும் என்.டி.ஏ. அறிவுறுத்தியுள்ளது.



No comments:
Post a Comment