Breaking

Sunday, April 5, 2020

வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்கள் தயார்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


வரும் கல்வியாண்டில், மாணவர்க ளுக்கு வழங்க வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை 90 சதவீதம் தயார் நிலையில் உள்ளன என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்துள்ளார்.
கோபி நகராட்சி பகுதியில் நட மாடும் காய்கறி விற்பனை அங்காடி மற்றும் நவீன கருவிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
கோபி நகராட்சி பகுதியில் 9 வாகனங் கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை 90 சதவீதம் தயார் நிலையில் உள்ளன. சில தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை செலுத்த சொல்வதாக புகார் கூறப்படுகிறது. இது உண்மையெனில் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும், என்றார்.a

No comments:

Post a Comment