Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 13, 2020

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிப்பு



சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில், தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 25 முதல் ஏப்.,ல் 30 வரை செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை, மே 30ம் தேதிக்குள் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்., மாதத்திற்கான மின் கட்டணம், ஜன., பிப்., மார்ச் மாதம் செலுத்திய மின் கட்டணத்தின் கணக்கைக் கொண்டு கணக்கிடப்பட்டு, அத்தொகை வசூலிக்கப்பட உள்ளது. மின் கட்டணத்தை இணைய வழியாக செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment