
சென்னை புறநகரில் உள்ள தனியார் பள்ளிகள் சிலவற்றில், 'ஆன்-லைன்' முறையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது, பெற்றோரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.ஊரடங்கு காரணமாக, பல வகுப்புகளுக்கு தேர்வு எழுதாமலேயே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.அட்டகாசம்மாணவர்கள் வெளியில் விளையாட முடியாமல் வீட்டில் முடங்கினர். நாளுக்கு நாள், அவர்களின் அட்டகாசம் அதிகரித்ததால் பெற்றோர் தவித்து வந்தனர்.இந்நிலையில், சென்னை புறநகரான, மடிப்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில், ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நேற்று துவக்கப்பட்டன. பள்ளிகளில் துவங்குவது போல, காலை, 9:30 மணிக்கு துவங்கி மதியம், 1:00 மணி வரை, நான்கு வகுப்புகள் இடைவெளியிட்டு நடைபெறுகின்றன. இதில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய வகுப்புகள் நடத்தப்படுகின்றன.வருகைப் பதிவுமாணவ - மாணவியருக்கு இது புது அனுபவமாக இருப்பதோடு, ஆர்வத்துடன் பங்கேற்றனர்.பள்ளி நிர்வாகத்தினர் தரப்பில் கூறியதாவது: மாணவர்கள் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆன்-லைன் மூலம் வகுப்புகள் துவங்கி நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் முதல், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் வகுப்பு எடுக்கப்பட உள்ளன. வருகைப் பதிவேடும் அதன் மூலம் பதிவு செய்யப்படும்.கோடை முடிந்து, பள்ளிகள் துவக்கும் வரை, இந்த ஆண்டு மாணவர்கள் வெளியில் செல்ல முடியாது என்பதால், தொடர்ந்து, ஆன்-லைன் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். - -நமது நிருபர்- -



No comments:
Post a Comment