Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 23, 2020

பல வெளிநாட்டுப் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வருவதன் ரகசியம் என்ன?

கோழி அடைகாக்காமலோ அல்லது செயற்கை முறையில் அடைகாக்கும் கருவி ( Incubator ) உதவி இல்லாமலோ முட்டையிலிருந்து குஞ்சு உருவாக முடியாது.


அடைகாத்தல் எனப்படுவதுதான் இட்ட முட்டைமீது தாய்க்கோழி அமர்ந்து தன் உடல் வெப்பத்தை செலுத்துவதாகும். தன் இரண்டு கால்களில் பின் விளிம்பில் முட்டைகளை வைத்துக் கொண்டு 21 நாட்கள் அமர்ந்து அடைகாக்கும்.
எப்போது வளர்ச்சி பெற்ற குஞ்சுகள் முட்டை ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரும். பறவைகள் - பாலூட்டிகள் - வெப்ப ரத்தப் பிராணிகள் இவற்றின் கரு வளர்ச்சி பெற ஒரு குறிப்பிட்ட மாறா வெப்பநிலை அவசியமாகிறது. பாலூட்டிகளில் கருவானது தாயின் கருப்பையில் வளர்வதால் , கரு வளர்ச்சிக்குத் தேவையான வெப்பநிலை தாய் உடல் வெப்பநிலையிலிருந்தே இயற்கையாக இயல்பாகக் கிடைத்துவிடுகிறது. ஆனால் , பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பன.
தாய்க்கோழியின் உடலைவிட்டு முட்டை வெளியேறியவுடன் முட்டையிலுள்ள கரு வளர்ச்சி பெறத் தேவையான மாறா வெப்பநிலை ( 38C - 39 C ). தாய்க்கோழியின் அடைகாத்தலிலிருந்தே கிடைக்கிறது. முட்டையிலுள்ள கரு வளர்ச்சி பெற்று முழு உயிராக மாற்றமடையத் தேவையான உணவுப் பொருள்களும் முட்டையிலேயே உள்ளன. 21 நாட்கள் அடைகாத்தலுக்குப் பிறகே முழு வளர்ச்சி பெற்ற குஞ்சு , முட்டை ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியேறி சுதந்திரமாக சுவாசிக்கிறது.


கோழிப் பண்ணைகளில் எண்ணற்ற முட்டைகளை அடைகாக்கும் கருவியில் ( Incubator ) மாறா வெப்பநிலையில் ( 37 . 8°C ) 21 நாட்கள் வைத்திருப்பர். செயற்கை அடைகாத்தல் முறையில் ஒரு குறிப்பிட்ட நாள் இடைவெளியில் முட்டைகளைத் திருப்பி ( rotate ) வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்தச் செயலால் கரு தன் கரு வெளிச்சவ்வுகளில் ஒட்டிக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.
இயற்கையில் ,தாய்க்கோழி அடைகாக்கும்போது தன் கால்களால் முட்டைகளைத் திருப்பிக் கொண்டே இருக்கும். இதுவும் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் நடைபெறும். பலலி , பாம்பு , ஓணான் போன்ற ஊர்வன வகையைச் சார்ந்த உயிரிகள் டையிடும் பண்பு கொண்டவை. ஆனால் இவற்றுக்கு அடைகாத்தல் பண்பு கிடையாது. காரணம் , இவை மாறும் உடல் வெப்பநிலை உயிரிகளாகும். தன் உடல் வெப்பநிலையை சூழ்நிலை சூழ்நிலை வெப்பத்திற்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ளும் தகவமைப்பை இவை பெற்றுள்ளன. பொதுவாக , ஊர்வன உயிரிகளை குளிர் ரத்தப்பிராணிகள் என்பர். இவை இடும் முட்டைகள் , சூழ்நிலை வெப்பத்திலேயே கருவளர்ச்சி அடைகின்றன.

பறவைகளின் முட்டையிலுள்ள கருவளர்ச்சிக்குக் குறிப்பிட்ட வெப்பநிலை தேவைப்படுவதன் அவசியமாகத்தான் குளிர் நாடுகளில் உள்ள பறவைகள் வெப்ப மண்டல நாடுகளுக்கு இடம் பெயர்ந்து ( migration ) வருகின்றன. பல வெளிநாட்டுப் பறவைகள் முட்டையிட்டு தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ள வேடந்தாங்கலுக்கு வருவது உங்களுக்கு நினைவிருக்கலாம் அதன் ரகசியமும் இதுதான்.

No comments:

Post a Comment