Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 27, 2020

ஊரடங்கு நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த மாவட்ட ஆட்சியரின் அசத்தல் ஐடியா..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என மாநில அரசு தெரிவித்தது. இதனால் அனைத்து மாணவர்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், ஊரடங்கு காலக்கட்டத்தை பயனுள்ளதாக மாற்றவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சிறப்பு ஆன்லைன் தேர்வு என்ற ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
அதன்படி முதல் கட்ட தேர்வு, 100 மதிப்பெண்களுக்கான தேர்வு. இதில் பள்ளிப் பாடங்கள் தொடர்பான கேள்விகள் இடம்பெறும்
இரண்டாம் கட்டமாக பள்ளி பாடங்கள் மற்றும் பொது அறிவு தொடர்பான கேள்விகள் இடம்பெறும் தேர்வு நடத்தப்படும். இதில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊரடங்கு காலம் முடிந்தவுடன் மூன்றாம் கட்டமாக வினாடி-வினா தேர்வு நடத்தப்படும்.
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment