Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 22, 2020

மின்கட்டணம் தெரிந்து கொள்ள புதிய வழி !! மின்சார வாரியம் அறிவிப்பு



கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டித்து இருப்பதால் , தமிழகத்தில் வீடு வீடாக சென்று மின் அளவீட்டை குறிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என்பதால், ஜனவரி, பிப்ரவரி மின்கட்டணத்தையே மார்ச், ஏப்ரலுக்கு செலுத்தலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருந்தது.
முந்தைய மாதக் கட்டணத்தை செலுத்துவது தற்போதைய பயனாளர்களுக்கு அதிகமாக இருப்பதாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் புகார் தெரிவித்தன. இதையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் மாற்று ஏற்பாடு செய்து, ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, தாழ்வழுத்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் தங்களது மின் இணைப்பின் மின்அளவீட்டை அனுப்பலாம்.
மின்அளவீட்டினை எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், இமெயில் மூலம் எழுத்து, புகைப்பட வடிவில் அனுப்பலாம். தங்களது மின் இணைப்பு சார்ந்த பிரிவு அலுவலகத்தின் உதவி, இளநிலைப் பொறியாளருக்கு அனுப்பலாம். www.tangedco.gov.in ல் உதவிப்பொறியாளர் அலுவலக கைப்பேசி, இ மெயில் விவரத்தை அறியலாம்.
மின் அளவீடு பெறப்பட்டவுடன் கட்டணத்தைத் திருத்தியமைத்து நுகர்வோருக்கு தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மின் கட்டணத்தை இணையம் வழியாக செலுத்தலாம் என்றும் மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment