Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 30, 2020

உடல் எடையை குறைக்க உதவும் நெய்?

நெய்யில் தேவையான அளவு அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன
கொழுப்பு நீங்கவும் நெய் பயன்படுகின்றன என்றார் ஊட்டச்சத்து நிபுணர் சில்பா
நெய் எடுத்து கொள்வதினால், சீரான செரிமானம் நடைப்பெறும்
தினமும் இரண்டு ஸ்பூன் நெய் உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்.
பொதுவாக நெய் மற்றும் வெண்ணெய் ஆகியவை உடல் எடையை ஏற்றவும், ஆரோக்கியமற்ற உணவு பொருளாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், வீட்டில் தயாரிக்கப்படும் சுத்தமான நெய்யில் உள்ள ஊட்டச்சத்து உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் வைட்டமின்களும், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் நெய்யில் உள்ளன. அவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன. வயிற்றில் ஏற்படும் தொப்பைக்கு காரணமான கொழுப்புகள் நீங்கவும் நெய் பயன்படுகின்றன என ஊட்டச்சத்து நிபுணர் சில்பா அரோரா கூறினார்.
உடல் எடையை குறைக்கும் நெய்
பொதுவாக, ஆரோக்கியமற்ற சமையல் பொருளாய் பார்க்கப்படும் நெய், சரியான அளவில் எடுத்து கொண்டால், உடல் எடையை குறைக்கவும், கொழுப்புகளை நீக்கவும் உதவும்.
நெய்யில் தேவையான அளவு அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன. இதனால், உடலில் உள்ள கொழுப்பு உயிரணுக்களையை குறைக்கின்றது. எனவே, உடலில் அதிக கொழுப்பு சேர்கிறது என்றால்,உணவுகளில் சிறிதளவு நெய் சேர்த்தால் கொழுப்புகளை நீக்கலாம்.
நெய்யில் உள்ள லினோலிக் அமிலங்கள் (ஒமேகா 6 வகை கொழுப்பு அமிலம்), உடல் எடையை குறைக்க உதவும்
இந்த வகை அமிலங்கள் உடல் மெலியவும், உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கவும் உதவும். இதனால் உடல் எடை குறையும்
நெய் எடுத்து கொள்வதினால், சீரான செரிமானம் நடைப்பெறும். எனவே உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும்
உடல் எடை குறைக்க நெய் உதவும் என்பது பயன் தரக்கூடிய விஷயம் என்றாலும், அதிக அளவில் நெய் சேர்த்துவதால், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கிறது. தினமும் இரண்டு ஸ்பூன் நெய் உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்.
அதிகரித்து வரும் கொழுப்புகளை நீக்க நெய் எடுத்து கொண்டாலும், சரியான அளவு உணவுகளை எடுத்து, உடற் பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைப்பது அவசியம்

No comments:

Post a Comment