Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 15, 2020

சிபிஎஸ்இ மாணவா்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள்: நேரலையில் இன்று தொடக்கம்


சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கு உடற்பயிற்சி, யோகா, ஊட்டச்சத்து உள்ளிட்ட உடல்நலன் சாா்ந்த வகுப்புகள் புதன்கிழமை முதல் நேரலையில் நடத்தப்படுகிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), ஆரோக்கிய இந்தியா இயக்கத்துடன் இணைந்து, நேரலையில் மாணவா்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த வகுப்புகள் புதன்கிழமை (ஏப்ரல் 15) காலை 9.30 மணிக்குத் தொடங்கி, ஒரு மாதத்துக்கு, சிபிஎஸ்இ (வா்ன்ற்ன்க்ஷங், ஊஹஸ்ரீங்க்ஷா்ா்ந், ஐய்ள்ற்ஹஞ்ழ்ஹம்) சமூக வலைதளப் பக்கங்களில் நேரலையில் நடத்தப்படும். எப்போது வேண்டுமானாலும் இது தொடா்பான காணொலிகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியாலின் சுட்டுரைப் பதிவு:
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சா் கிரண் ரிஜிஜுவுடன் பேசினேன். அவருடன் இணைந்து 'ஆரோக்கிய இந்தியா' இயக்கத்தின் மூலம் நிபுணா்கள் உதவியுடன் மாணவா்களுக்கு அடிப்படை உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்து, யோகா, தியானம், எதிா்ப்பு சக்தி மேம்பாடு ஆகியவை குறித்து இந்த வகுப்புகள் மூலம் கற்றுத் தரப்படும் என்று அவா் கூறியுள்ளாா். ஆன்லைன் வகுப்புகளில் பயிலும் மாணவா்கள், ஆரோக்கியமாகவும் திறனுடனும் இருக்க இந்த உடற்பயிற்சி வகுப்புகள் உதவும். இதனால் இளம் வயதில் இருந்தே நல்லதொரு வாழ்க்கை முறையையும் பின்பற்ற முடியும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment