Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 13, 2020

நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெற சப்போட்டா பழம்!



சப்போட்டா பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோலின் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெறலாம்.
சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இந்த சப்போட்டாவில் அதிக அளவு உள்ளது. சத்துக்களின் குறைபாட்டின் காரணமாக நம் எலும்புகளானது ஆற்றலை இழக்கின்றது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சக்தி அதிகரிக்கப்பட்டு எலும்புகள் வலுவடைகிறது.

சப்போட்டாவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் மற்ற சத்துக்கள் அதிகளவு உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
நம் உடலில் இருக்கும் நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மையானது சப்போடாவிற்க்கு உள்ளது. இந்த சப்போட்டாவை தொடர்ந்து உண்டு வந்தால் தூக்கமின்மை, பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment