
தமிழக அரசு பத்தாம் வகுப்பு தேர்வை ஜுன் 01 முதல் 12 வரையில் நடத்த தீர்மானித்து அட்டவணையும் வெளியிட்டுள்ளது.
அவ்வாறு தேர்வு நடத்த வேண்டுமானால் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட வேண்டும்.பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு தூய்மை படுத்தப்படவேண்டும்.
பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படவேண்டும்.அப்போதுதான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரமுடியும்.
தேர்வு அறையில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டுமாகையால் ஒரு அறைக்கு10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க முடியும்.
இதனால் கூடுதல் அறைகள்,கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள்.
ஏற்கனவே ஆசிரியர்கள் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு பணியும் ஒதுக்கீடு செய்யயப்பட்டு விட்டன.
கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்தி பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கு கால அவகாசம் போதுமா தெரியவில்லை.
தேர்வு அறைக்குள் நுழையும் மாணவ மாணவிகளுக்கு சானிடைசர் மூலம் கைகளை கழுவிவர அனைத்து தேர்வு மையங்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு இலவசமாக முகக்கவசம் வழங்க வேண்டும்.
தேர்வு அறையிலும் கண்காணிப்பாளர்கள் மாணவர்களின் அருகாமையில் சென்று நுழைவுச்சீட்டை சரி பார்த்து கையொப்பமிடவோ,கூடுதலாக விடைத்தாள் வழங்கவோ,தேர்வு முடிந்து எழுதப்பட்ட விடைத்தாள்களை வாங்கவோ,காப்பியடித்தால் பிடிக்கவோ முடியாது.
எந்த மாணவனுக்கும் தொற்று இல்லை என்பதை எவரும் உறுதியாக கூறமுடியாததால் அவர்களை காய்ச்சல், இருமல்,சளி மருத்துவ பரிசோதனை நடத்தித்தான் அனுப்ப வேண்டும். இதற்கு ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.
சொல்வதை கேட்டு எழுதும் ஆசிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பார்வையற்ற மாணவர்களுக்கு வினாவை கூறி புரிய வைப்பதிலும்,விடையை கேட்டு எழுதுவதிலும் இச்சமூக இடைவெளி சிரமம் கொடுக்கும்.
இத்தனை கெடுபிடிகளைக் கடந்து பதட்டம் ஏதும் இல்லாமல் மாணவர்கள் தேர்வை எழுதி முடிக்க வேண்டும்.
எழுதி முடித்த விடைத்தாட்களை சீல் வைத்து தேர்வு அலுவலர் சமூக இடைவெளியில் சரிபார்த்து கவரில் போட்டு அடைக்க செய்ய வேண்டும்.
இத்தனை சோதனைகளைக்கடந்து வாகன ஓட்டுனர் தொற்று இல்லாதவரா என சோதித்த பின்னரே அவரது வாகனத்தில் விடைத்தாள் ஏற்றி வழித்தட அலுவலர் செல்ல முடியும்.
இதன் ஒவ்வொரு நிகழ்விலும் சுகாதார விழிப்புணர்வு தேவைப்படும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தேர்வுத்துறை எந்த ஒரு மாணவனுக்கும் பாதிப்பு வராமல் தேர்வை எங்ஙனம் நடத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-நாஞ்சிலார்.



A lot of practical difficulties are there for conduct the exam because if the affected people count increase it will affect the student also it is very risky to conduct the exam.
ReplyDelete