
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தள்ளி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழகத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருவதாகவும் 200 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு சென்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், பொதுத் தேர்வு பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை ஏற்படும் வரை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் விடுபட்டவர்களுக்காக நடத்தப்படும் 12ஆம் வகுப்பு தேர்வையும் தள்ளி வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment