Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 18, 2020

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளிக் கல்வித்துறைக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்



10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 27-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தேதி குறிப்பிடாமல் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையும் தேர்வுத் துறையும், தேர்வை நடத்தத் தயாராகி வருகின்றன. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர், முதல்வர்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்ட பின் பொதுத்தேர்வை வைத்துக் கொள்ளலாமே என்று நடிகர் விவேக் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 'பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும்.' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment