Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 2, 2020

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை - மொத்த காலியிடங்கள்: 259



என்எல்சி நிறுவனம் என அழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 259 கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 259
பணி: Graduate Executive Trainee (GET)
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன், கம்ப்யூட்டர், மைனிங் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், ஜியாலஜி, நிதி, எச்.ஆர் போன்ற பிரிவிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.03.2020 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.854. மற்ற பிரிவினர் ரூ.354 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பத்தை மே17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com/new_website/careers/advt/GET-MAR-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment