Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 4, 2020

ஜூன் 3வது வாரத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- தேர்வுத்துறை


கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனிடையே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 3 ஆவது மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தலாம் என்றும் 10 நாட்களில் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment