Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 28, 2020

கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் 'ஆர்சனிக் ஆல்பம் 30' ஓமியோபதி மருந்து வழங்கல்



ஒயிட் ரோஸ் பொதுநல சங்கம், அஸ்வின் ஹோமியோ கிளினிக் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்தான 'ஆர்சனிக் ஆல்பம் 30' என்ற ஓமியோபதி மருந்தினை திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர் மோகனிடம் வழங்கினர். அஸ்வின் ஓமியோபதி கிளினிக் மருத்துவர் ரகு கூறுகையில், "கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகியவற்றின் மூலம் நம் முன்னோர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்காக, பல்வேறு முயற்சிகளை எடுத்து, பல கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தது மனித குலத்திற்கு உபயோகமாக இருந்தது. சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயமும், ஆயுர்வேதத்தில் இஞ்சி, சுக்கு, எலுமிச்சை பழச்சாறும், ஓமியோபதி மருத்துவத்தில் 'ஆர்சனிக் ஆல்பம் 30' என்பது ஏறக்குறையாக கேடயம் போன்று செயல்படுகின்றது. உயிரைக் காக்கும் கேடயமாக இது செயல்படுகிறது. கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் உருவாக்கும் என்றார். ஒயிட் ரோஸ் பொது நல சங்க தலைவர் சங்கர், இ.ஆர்.பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முரளி, நோ ஃபுட் வேஸ்ட் திருச்சி நிறுவனர் ராமகிருஷ்ணன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment