Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 5, 2020

வங்கிக் கடன் தவணை தள்ளிவைப்பு : மேலும் 3 மாத அவகாசம் ?



வீட்டுக் கடன் உள்ளிட்ட வங்கிக் கடன் தவணைகளை திரும்ப கட்ட கூடுதலாக பொது மக்களுக்கு 3 மாத அவகாசம் தரப்படும் எனத்தெரிகிறது.
வங்கிக்கடன் தவணை செலுத்துவதற்கான கால அவசாகம் தள்ளி வைக்கப்படுவது தொடர்பான அறிவுறுத்தலை வங்கிகளுக்கு வழங்க ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது.
இதனால் தொழில், வணிக நிறுவனங்கள் செயல்படாததால் பணியாளர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு 3 மாத காலம் கடன் தவணைகளை வங்கிகள் தள்ளி வைத்துள்ளன. இந்நிலையில் பொது முடக்க காலம் சுமார் 2 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டதால் கடன் வாங்கியோர் நலன் கருதி, மேலும் 3 மாதங்களுக்கு தவணை வசூலிப்பதை ஒத்தி வைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்த ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

1 comment: