Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 29, 2020

முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 50% இடஒதுக்கீடு.. உச்ச நீதிமன்றத்தில் திமுக அதிரடி வழக்கு!

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை, அதில் 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுக சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக கட்சி தீவிரமாக குரல் கொடுத்து வருகிறது. ஜூன் - ஜூலை மாதத்தில் நீட் தேர்வு நடக்க வாய்ப்புள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இதற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வருகிறார்.

முக்கியமாக இளநிலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போலவே முதுநிலை மருத்துவ படிப்பிலும் அநீதி நிலவி வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை. அங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படுவது இல்லை என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இதுவரை 11 ஆயிரம் இடங்களை இப்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளனர் என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார். இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை, அதில் 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

இதில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டை இதிலும் பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்படுள்ளது. அதுவரை 2020 முதுநிலை மருத்துவ தேர்வை நிறுத்தி வைக்கவும் வழக்கில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment