
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கி கிடக்கும் மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கும் விதமாக திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள எசனைக்கோரை கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகிறார்கள்.
அவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கும் வகையில் செல்போன்களில் 'மீட்' என்ற செயலி வழியாக கல்வி பயின்று வருகின்றனர். தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்கள் தினமும் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடக்கிறது. பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன் தனது செல்போன் மூலமாக இந்த ஆன்லைன் வகுப்பு களை கவனித்து வருகிறார்.



No comments:
Post a Comment