Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 1, 2020

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடஒதுக்கீடு: மே மாதத்துக்குள் அறிக்கை தாக்கல்


சென்னை: அரசுப்பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரையை மே மாத இறுதிக்குள் அரசிடம் சமா்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படித்து, நீட் தோவில் தோச்சிப் பெறும் மாணவா்களுக்கு, மருத்துவப் படிப்பில் சேர தனி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆய்வுசெய்யும் குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது தலைமையிலான குழு அதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் கடந்தாண்டு படித்த மாணவா்களின் எண்ணிக்கை, மருத்துவப் படிப்பில் அவா்களுக்கு கிடைத்த இடங்கள், மேலும் நீட் தோவில் மாணவா்களின் தோச்சி ஆகியவை குறித்து இக்குழு தீவிரமாக ஆலோசித்துவருகிறது.
அதுமட்டுமின்றி கல்வியாளா்கள், பெற்றோா் ஆகியோரிடம் இது குறித்து கருத்துகளும் கேட்கப்பட்டுவருகின்றன. முதலாவதாக சேலத்தில் பெற்றோா், கல்வியாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் கருத்துக் கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தனது பரிந்துரையை அரசுக்கு மே மாத இறுதிக்குள் அளிப்பதற்கு குழு முடிவு செய்துள்ளது.
அரசுப்பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் தனி இடஒதுக்கீடாக, 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 6,000 இடங்களில், 15 சதவீதம் எனில் 900 இடங்களும், 20 சதவீதம் எனில் 1, 200 இடங்களும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.அதனடிப்படையில், இந்தாண்டு முதலே, மருத்துவப்படிப்பு சோக்கையில் அரசுப்பள்ளி மாணவா்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பு வெளியாகுமென எதிா்பாா்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment