Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 1, 2020

தமிழகத்தில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற கொரோனா பாதிப்பு மாவட்டங்கள் எவை? மத்திய சுகாதாரத்துறை வெளியீடு!



தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்கள் எந்த மண்டத்தில் உள்ளன என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் (ஹாட்ஸ்பாட்), மிதமான பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் (நான் ஹாட்ஸ்பாட்) மற்றும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகாத மாவட்டங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதில், பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலம் என்றும், மிதமான பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்கள், தொற்றே இல்லாத மண்டலங்கள் பச்சை மண்டலங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும், அந்த மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றாலும், அந்த பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹாட் ஸ்பாட் (சிவப்பு மண்டலம்) என்றால் அதிக கவனம் தேவைப்படும் மாவட்டமாக 12 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, மதுரை, விருதுநகர், நாமக்கல், தஞ்சாவூர் , செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஆரஞ்சு மண்டலமாக 24 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தேனி, தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நெல்லை, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, தருமபுரி, திருச்சி ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பச்சை மண்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கடந்த முறையே விட தற்போது, தமிழகத்தில் சிவப்பு மண்டலங்கள் குறைந்துள்ளது. கடந்த முறை 30 மாவட்டங்களாக இருந்த நிலையில், தற்போது, 12 மாவட்டமாக குறைந்துள்ளது. 28 நாட்களுக்குள் புதிதாக கொரோனா நோயாளி பாதிப்பு வராத பட்சத்தில் அது பச்சை மண்டலம் அதாவது பாதுகாப்பாக மண்டலமாக கருதப்படும். அந்த வகையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலமாக உள்ளது.

No comments:

Post a Comment