Breaking

Thursday, May 14, 2020

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் சோதனை! - தமிழக அரசு அறிவிப்பு!



தமிழகத்தில் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிவரும் நிலையில் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திக்குள் உள்ள மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பவர்களுக்கு அறிகுறிகள் இருந்தாலே தவிர பரிசோதனை அவசியமில்லை. அதேசமயம், அடுத்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கண்டிப்பாக செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தொற்று உறுதியாகும் பட்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர் அல்லது 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment