Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 2, 2020

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம் - அரசு ஆலோசனை



பள்ளி, கல்லுாரிகள் செயல்படாத நிலையில், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. அடுத்த கல்வி ஆண்டில் தான், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. அதுவரை, ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களில் ஒரு பிரிவினருக்கு பணிகள் இல்லை.
அதாவது, 10ம் வகுப்பு பாடம் எடுக்கும் பட்டதாரி மற்றும் மேல்நிலை வகுப்பு நடத்தும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், விடைத்தாள் திருத்தும் பணிகள் உள்ளன. மற்ற ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், புதிய கல்வி ஆண்டு வரை பணிகள் இல்லை.
இந்நிலையில், மார்ச்சில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, இந்த கல்வி ஆண்டு முடியும் காலமான, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என, கல்வி அலுவலகங்களுக்கு கடிதங்கள் வந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் போது, ஓய்வு காலத்தை கடந்தாலும், அந்த கல்வி ஆண்டு முடியும் மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பள்ளி, கல்லுாரிகள் செயல்படாததால், பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என்ற முடிவுக்கு, பள்ளி மற்றும் கல்லுாரி கல்வித்துறை வந்துள்ளது.
எனவே, விடை திருத்த பணிகள் உள்ள ஆசிரியர்களை தவிர, தொடக்க பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, பணி நீட்டிப்பு உத்தரவை நிறுத்தி வைக்க, மாவட்ட மற்றும் மண்டல அலுவலகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பணி நீட்டிப்பு வழங்காவிட்டால், மே மாத சம்பளம் வழங்கப்படாது; ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும் என, அரசுக்கு சில அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment