
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு நேரில் வரவேண்டாம் என்றும், டோக்கன் வீட்டிற்கே கொண்டு வந்த தரப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, தேதி, நேரம் குறித்து டோக்கன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நடப்பு மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் வழங்க, இன்று (02.05.20) முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. நடப்பு மாதத்துக்கு 6,80,949 ரேஷன் கார்டுகளுக்கு, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். என்றும் அரிசி கார்டுக்கு, அரிசியும் இலவசமாக கிடைக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வீடுவீடாக டோக்கன் வழங்கப்படும் என்றும் வரும் 4ஆம் தேதி முதல் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment