Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 5, 2020

மருத்துவ குணம் நிறைந்த வெங்காயம்!



வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது. பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது.
இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சோகை நோயை தவிர்க்கலாம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க வெங்காயத்தில் இருக்கும் குரோமியம் உதவுகிறது. மேலும், இதிலிருக்கும் சல்ஃபர் இன்சுலினை இயற்கையாக சுரக்கச் செய்வதால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம்.
உடலில் வலிமை இல்லாதவர்கள் சிறிது வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும்.
நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட்டாலோ அல்லது வெங்காயச் சாற்றை நீரில் கலந்து குடித்தாலோ, நல்ல தூக்கம் வரும்.
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. இதனால் உடல் பருமன் உள்ளவர்கள் வெங்காயத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் பருமனையும் கரைத்து, ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கிறது.

No comments:

Post a Comment