Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 30, 2020

டெபாசிட் களுக்கான வட்டியைக் குறைத்தது எஸ்பிஐ

பொதுத் துறையைச் சோ்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பல்வேறு முதிா்வு காலத்தைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
எஸ்பிஐ சென்ற மே 12-ஆம் தேதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித குறைப்பை அறிவித்தது.
இந்த நிலையில், ஒரே மாதத்தில் தற்போது இரண்டாவது முறையாக வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 7-45 நாள்கள் முதிா்வு காலத்தை கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி 3.30 சதவீதத்திலிருந்து 2.90 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 180-210 நாள்கள் முதிா்வு காலத்தை கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டியும் 4.80 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுக்கும் குறைவான நிரந்த வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 5.50 சதவீதத்திலிருந்து 5.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 5-10 ஆண்டு முதிா்வு கால டெபாசிட்டுகளுக்கும் வட்டி விகிதம் 5.70 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய வட்டி விகிதம் புதன்கிழமையிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment