Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 15, 2020

கொரோனா ஆண்களை விரும்புவது ஏன்? ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்த ஆச்சரிய தகவல்கள்


கொரோனா வைரஸ் ஏன் ஆண்களை அதிகமாக தாக்குகிறது என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் 45 லட்சத்தை கடந்து உயிரிழப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. பாதிப்பிலும், இறப்பிலும் 60 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் ஆண்களாகவே இருக்கின்றார்கள்.
இதற்கான விடைகளை தேடிய ஆராய்ச்சியாளர்களுக்கு சில ஆச்சரியங்கள் கிடைத்துள்ளன. பெண்களிடம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தான் அவர்களைக் காக்கும் வேலையை செய்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர். ஆண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பதில்லை. கொரொனா வைரஸ் ACE 2 புரோட்டீனை பயன்படுத்திய மனித உடலில் உள்ள செல்களை தாக்குகிறது. இது பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இருப்பதால் இயல்பாகவே அவர்கள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஐரோப்பிய இதயநோய் பத்திரிகை ஒன்றில் வெளியான ஆய்வு முடிவு. ஈஸ்ட்ரோஜன் ACE 2 புரோட்டீனை பாதிப்பதால் கொரொனா வைரஸுக்கு பெண்களிடம் இயல்பாகவே ஒரு எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.
TLR எனப்படும் ஜீன் அதாவது டால் லைக் ரிசப்டார்ஸ் என்ற ஜீன் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த TLR ஜீன் எக்ஸ் குரோமோசோமில் அதிகம் காணப்படுகிறது . ஆண்களுக்கு ஒரு எக்ஸ் குரோமோசோம் உடனும் பெண்கள் இரண்டு எக்ஸ் குரோமோசோம் உடனும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பெண்களுக்கு அதிகமாக காணப்படுகிறது.
மும்பையில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 68 பேரிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படி நெகடிவ் ரிசல்ட் உள்ள பெண்களிடம் கொரொனா கிருமிகள் 4 நாட்களில் முழுவதும் மறைகிறது. ஆனால் ஆண்களிடம் மறைய 6 நாட்கள் ஆகிறது என தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment