
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மண்டல சிறப்பு குழு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கரோனா தடுப்பு பணிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, பொது மக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலியை சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் சாதாரண சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியின் சார்பில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment