
அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் சென்னையில் அனுமதிக்கப்படும்.
சென்னையில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், செல்போன் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்
சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த சார்ந்த நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோர் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்.
கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில் அப்பணிகளுக்கு அனுமதிக்கப்படும்.
சென்னையில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை.
மாநகராட்சி , நகராட்சிக்கு வெளியே அனைத்து ஆலைகள் 50 % பணியாளர்களுடன் இயங்கலாம்.
15 ஆயிரம் மக்கள் கொண்ட பேரூராட்சிகளில் , ஜவுளி நிறுவனங்கள் 50 % ஆட்களுடன் செயல்படலாம்.
ஐ.டி நிறுவனங்கள் 50 சதவிகிதம் ஊழியர்களுடன் பணியாற்றலாம்.
தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டகள் மற்றும் ரிசார்ட்டுகள் போன்றவை செயல்பட தடை.
மாநிலங்களுக்கிடையேயான பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது. மதுகடைகள் இயங்க தடை.
அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் (e- commerce) நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.
சென்னையில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
சென்னையை தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 50 சதவித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நிறுவனம் ஏற்பாடு செய்யும வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
சென்னையை தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் SEZ, EOU,தொழிற்பேட்டைகள் 50 சதவித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.



No comments:
Post a Comment