Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 19, 2020

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு: தலைமையாசிரியர்கள் ஆலோசனை கூட்டம்


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி., அரசு பொதுத்தேர்வு, ஜூன், 1ல் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறித்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, 21 ஆயிரத்து, 303 பேர் எழுத விண்ணப்பித்துள்ளனர். இதற்காக, 310 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு குறித்து, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தனியாகவும், தனியார் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தனியாகவும் நடத்தப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். தேர்வு மையங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அனைத்து பெற்றோருக்கும் தேர்வு நடைபெறுவது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். வெளிமாவட்டத்தில் தங்கியுள்ள, 1,495 மாணவ, மாணவியருக்கு, இ-பாஸ் பெறுவதற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். 100 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment