Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 24, 2020

இம்மாத இறுதிக்குள் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்



கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளும் அதற்கு பிறகு தான் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள அமைச்சர் செங்கோட்டையன், “இம்மாத இறுதிக்குள் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


முன்னதாக ஆன்லைன் கல்வி திட்டம் முறைபடுத்துவதற்கான விதிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கோள்ளப்பட்டு வருகிறது. பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மையை 20 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து வருகிறோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment