
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடையும் நபர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தாலும், உயிரிழப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அதிதீவிரமாக பரவ துவங்கிய கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைகளுக்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு 12 நாட்களுக்கு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது.
மதுரை மாவட்டத்திலும் ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தேனியிலும் முழு ஊரடங்கு அமலாகிறது. இதே சூழலில் மாவட்ட வாரியாக மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரிக்க துவங்கியுள்ளது.

இதனால் தமிழக முழுவதும் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தலாமா? அல்லது மாவட்ட வாரியாக ஊரடங்கை அமல்படுத்தலாமா? அல்லது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், தீவிரப்படுத்த வேண்டிய நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இதன் முடிவில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து பல அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் 30 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கும் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.



No comments:
Post a Comment