Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, டி.ஆர்.ஓ., சாந்தி தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். அதில், குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற, விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று, டி.ஆர்.ஓ., வாசிக்க, அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் டி.ஆர்.ஓ., சாந்தி பேசுகையில், '' முகாமிற்கு செல்லும் இடங்களில் குழந்தைகளை பார்த்தால், பள்ளி செல்கிறார்களா என விசாரித்து உறுதி செய்து கொள்ளுங்கள். பள்ளிக்கு செல்லாதபட்சத்தில், நீங்கள் கட்டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டும்,'' என்றார். தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட இயக்குனர் பிரியா, தொழிலாளர் நலத்துறை அலுவலர் திருநந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment