Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 23, 2020

புற்றுநோயிலிருந்து விடுபட மீன் சாப்பிடுங்கள்.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

அசைவ உணவு வகைகளில் ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை விட கடல் உணவுகள் ஆரோக்கியமானது என்கி றார்கள் மருத்துவர்கள். கடல் உணவான மீன் உணவுகளின் ஆரோக்கியம் அற்புதமானது என்பதை உணர்ந்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆடு, கோழி இறைச்சியை விட மீன் உணவுகள் தீங்கில்லாதது என்பதோடு இதில் சத்துகளும், கொழுப்பு அமி லங்களும் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் அசைவ உணவுகளில் ஒன்றான மீன்களில் இருந்து மாத்திரை கள் தயாரிக்கப்படுகிறது. மனிதனின் மூளை சிறப்பாக செயல்பட கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த கொழுப்பு அமி லங்கள் மீன்களில் அதிக அளவு இருப்பதாக ஆய்வு ஒன்றில் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். மைண்ட் என்னும் மனநலம் தொடர்பான தொண்டு நிறுவனம் ஒன்றும் உண்ணும் உணவுக்கும் அவரது மன நலத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியுள்ளது. தொடர்ந்து மீன் உணவு வகைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு மன அழுத்த நோய் வரும் அபாயம் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவித்திருக்கிறது.

அதிகம் தீங்கு விளைவிக்காத மீன் உணவு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தைப் பாதுகாக் கிறது. மன அழுத்தம் வராமல் காக்கிறது. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு என்றும் இதைச் சொல்லலாம். முக்கியமாக குடல் புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் புற்றுநோய் என்பது பெரும்பாலோரைத் தாக்கும் நோயாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் தான் என்கிறார்கள் மருத்துவர்கள். அதே நேரத்தில் சில ஆரோக்கியமான உணவுகளைத் தவறாமல் எடுத்துகொள்ளும் போது இயற் கையாகவே புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

அதன் படி பார்த்தால் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் காஸ்ட்ரோ என்ட்ரோலஜி மற்றும் ஹெபடாலஜி இதழில் வெளி யிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நாம் உண்ணும் உணவில் மீன்களை அடிக்கடி சேர்த்துக் கொண்டேவந்தால் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவாக உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆராய்ச்சியை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், சர்வதேச புற்றுநோய் மையமும் இணைந்து நடத்தி யுள்ளது. வாரத்திற்கு மூன்று முறையாவது மீன் எடுத்துக் கொள்ள வேண்டும். மீன் உணவு வகைகளோடு மீன் எண்ணெய் சேர்த்து எடுத்துகொளவதும் நல்லது. மீன் இயற்கையாகவே புற்று நோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. மீன் உணவுகளைத் தொடர்ந்து எடு த்துக் கொண்டு வந்தால் பெருங்குடல் புற்றுநோய் வருவதை 12 % வரை குறைக்கும் வாய்ப்புள்ளது என்கிறார் கள் மருத்துவர்கள்.

இந்த ஆராய்ச்சியில் மீனில் அடங்கியுள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்களுக்கும், பெருங்குடல் புற்றுநோய்க் கும் இடையேயான தொடர்பு ஆராயப்பட்டது. ஒமேகா -3 பாலி அன்சாச்சுரேட்டட் (polyunsaturated) கொழுப்பு அமிலங்களின் வெளிப்பாடு பெருங்குடல் புற்றுநோய் வீரியத்தைk குறைக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது என்பது இதன்மூலம் தெள்ளத் தெளிவாக தெரிய வந்தது. முதலில் இந்த ஆய்வு மீன் உட்கொள்வது மற்றும் நீண்ட சங்கிலி n-3 பாலிஅன்சாச்சுரேட்டட் (polyunsaturated) கொழுப்பு அமிலங்கள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றுக்கு இடையேயான தெளிவற்ற நிலையில் அது தொடர்பாகவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆனால் தற்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஐரோப்பிய வருங்கால விசாரணையின் தரவுப் பதிவேட்டை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வில் கலந்து கொண்ட நபர்களின் உணவுப் பழக் கத்தை ஆராய்ந்தார்கள்.

அப்போது அதிகமாக மீன் சாப்பிட்டு வந்தவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் தாக்கம் குறைவாக இருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணம் மீனில் உள்ள n-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் வெளிப் பாடு தான் என்பதும் கண்டறியப்பட்டது. மீன்களில் அதிகளவு புரோட்டீன் மற்றும் விட்டமின் டி போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. புற்றுநோய் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, மீன்களில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மன அழுத்தத்தைத் தடுக்கவும் உதவுகிறது என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பைபோலார் டிஸ் ஆர்டர் (இருமுனை மனக் கோளாறு) போன்ற பிற மன நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க மீன் உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்க, மாரடைப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, பக்கவாதம் போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

மீன் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் ஒமெகா 3 என்னும் கொழுப்பு அமிலத்தை இயற்கையாக தருகிறது மத்திமீன். இதை குழம்பாக செய்யாமல் வாணலியில் வறுக்கும் போது இதிலிருந்து ஒமெகா எண்ணெய் வடிவதைப் பார்க்கலாம். மீன் உணவுகள் குடல் புற்றுநோய் மட்டுமல்லாமல் கண்களையும் பாதுகாக்கிறது. மீன் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறுகிறது. மேலும் கெட்ட கொழுப்புகள் உடலில் தங்குவதும் குறைகிறது. மீன் உணவு வகைகளை வறுப்பதும், எண்ணெயில் பொரிப்பதையும் தவிர்த்து குழம்பாக செய்து சாப்பிடுவது அதிக நன்மைகளைத் தரும் என்கிறார்கள் மருத்துவர்கள். வளரும் குழந்தைகளுக்கு அசைவ உணவுகளைப் பழகும் போது அதிகமாக கடல் வாழ் உணவுகளைக் குறிப்பாக மீன் உணவுகளைப் பழக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மூளை சம்பந்தமான நோய்களான மன அழுத்தம், அல்சைமர் நோய், டிமென்ஷியா, டயாபெட்டீஸ் மற்றும் கவனக் குறைவால் மிகை செயல்பாடு கோளாறு போன்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News