Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 24, 2020

"கொரோனாவை தடுக்க இதுதான் வழி" : அமைச்சர் விஜயபாஸ்கர்



தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். அதில், "கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸை எதிர்த்து நாம் அனைவரும் போராடிக்கொண்டிருக்கும் இந்த சூழலில் இரண்டு விஷயத்தை கடைபிடிக்க வேண்டும். அதாவது வெளியில் செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். வெளியில் சென்று வந்தால் கை கால்களை சோப்பு போட்டு தேய்த்துக் கழுவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


மேலும், "நம்முடைய சுயகட்டுப்பாடு மிகவும் முக்கியம். மக்கள் ஒத்துழைப்பு என்பது மிக மிக அவசியம். இது ஓவ்வொருவருடைய உயிரை காப்பதற்காக சொல்கிறோம். தடுப்பூசி மற்றும் மருந்தே இல்லாத இந்த நோயை சுயகட்டுப்பாடு இருந்தால்தான் எதிர்கொள்ள முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment