பள்ளி கல்வி துறையின் அங்கமான, அரசு தேர்வு துறைக்கு, புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்ததுறையின் இயக்குநராக இருந்த உஷாராணி, 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை கவனித்து வந்தார்.அவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
இதையடுத்து, அரசு தேர்வு துறையின் புதிய இயக்குநராக, பழனி சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, பள்ளி கல்வி முதன்மை செயலர், தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவு:அரசு தேர்வு துறை இயக்குநராக பணியாற்றும் உஷாராணி, உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஜூன், 9 முதல், ஜூலை, 7 வரை, மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.எனவே, அரசு தேர்வு துறையின் பணிகளை கவனிக்கும் வகையில், நிர்வாக நலன் கருதி, புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடக்க கல்வி இயக்குநராக பணியாற்றும் பழனிசாமி, அரசு தேர்வு துறை இயக்குநர் பொறுப்பை, முழு நேர கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment