கூடுவெளி அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரும் 5ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.அரசு பாலிடெக்னிக் முதல்வர் தங்கமணி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:காட்டுமன்னார்கோவில் தாலுக்கா கூடுவெளி அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் 2020-21ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன் லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
கல்லுாரியில் சிவில் (அமைப்பியல்), மெக்கானிக்கல் (இயந்திரவியல்), எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் (மின்னியல் மற்றும் மின்னனுவியல்) எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் (மின்னனுவியல் மற்றும் தொடர்பியல்), கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் (கணினிப் பொறியியல்) ஆகிய துறைகளில் மூன்று ஆண்டு டிப்ளமோ (பட்டயம்) படிப்புகள் நடக்கின்றன.
கல்லுாரியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இணைய தளம் (ஆன்லைன்) வழியாக வரும் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் ஆன் லைன் விண்ணப்பங்களை ஸ்மார்ட் போன் (smart phone), லேப்டாப் (Laptop) வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
கடலுார் மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்ப மையமான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இன்ஜினியரிங் புலத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.



Is this compatible for other tamilnadu govt diploma college
ReplyDelete