Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 21, 2020

வால்வ் பொருத்தப்பட்ட என்-95 முகக்கவசம் பயன்படுத்த வேண்டாம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை


வால்வு பொருத்தப்பட்ட என்.95 முகக்கவசம் பயன்படுத்துவது கரோனா பரவலை தடுக்காது. மாறாக கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.

முகக்கவசம் அணிவது பற்றி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் கரோனா பரவ ஆரம்பித்தக் காலங்களிலிருந்தே புழங்கி வருகின்றன. ஒரு சில ஆய்வுகள் முகக்கவசம் அவசியம் என்கிறது, இதில் ஒரு சில ஆய்வுகள் என்.95 மட்டுமே பரவலைத் தடுக்கும் என்று கூறுகிறது, மற்ற முகக்கவசங்களால் பயனில்லை என்று கூறப்பட்டது, ஆனால் அதன் பிறகு சமீபத்திய ஆய்வில் முறையாக முகக்கவசம் அணிந்தால் கரோனா தாக்கும் அபாயம் 65% குறைவு என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முகக்கவசம் அணிவது தொடர்பான எச்சரிக்கை கடிதம் ஒன்றை, மத்திய சுகாதார சேவைகளின் பொது இயக்குனர், மாநில சுகாதார மற்றும் மருத்துவ கல்வி முதன்மைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.

என்-95 முகக்கவசத்தின் பொருத்தமில்லாத வகையில் பயன்படுத்துவதை காண முடிகிறது. குறிப்பாக வால்வுடன் கூட முகக்கவசங்களை நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தவிர பொதுமக்களும் பயன்படுத்துகின்றனர். இந்த முகக்கவசம் ஒருவரிடமிருந்து கரோனா வைரஸ் கிருமி வெளியேறுவதை தடுக்காது. இதனால் நோய் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் தீங்காக முடியும். எனவே அனைவரையும் மூக்கு, வாயை முழுவதுமாக மூடும் முகக்கவசத்தை பயன்படுத்த வலியுறுத்துங்கள். பொருத்தமற்ற முறையில் என்-95 முகக்கவச பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் என்று சுகாதரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment