Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 30, 2020

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜாக்டோ - ஜியோ அமைப்பு வலியுறுத்தல்


காஞ்சிபுரம்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் மீது புனையப்பட்டுள்ள குற்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்களிடம் ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு ) மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி ஆகியோரிடம், காஞ்சிபுரம் மாவட்ட ஜாக்டோஜியோ சார்பில் ஒருங்கிணைப்பாளர் லெனின், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் குமரவேல், பாலமுருகன், நாராயணசாமி, தேவராஜன் ஆகியோர் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனுகுமார், தி.சேகர், முகம்மது உசேன் ஆகியோர் தலைமையில் செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயராஜ் ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில், பணி ஓய்வு நாளன்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உள்பட ஜாக்டோ ஜியோ முன்னணி ஊழியர்களின் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்யவேண்டும்.

ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பேட்ரிக் ரெய்மாண்ட், ரவிச்சந்திரன் ஆகியோர் மீது புனையப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரான குற்ற குறிப்பானையை ரத்து செய்யவேண்டும், தமிழக முதல்வர் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்போது, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தாமோதரன், விக்டர், சீனுவாசன், நாராயணசாமி, மாயவன், சுப்பிரமணி, ஸ்டாலின், வடிவேல், ராம்பிரசாத், தியாகு, ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment