Breaking

Monday, July 13, 2020

கல்லூரி சேர்க்கை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் -அமைச்சர் கே. பி. அன்பழகன் அறிவிப்பு



கல்லூரி சேர்க்கை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் கே. பி. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் தான் பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது.குறிப்பாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.மேலும் பள்ளிகள் ,கல்லூரிகளின் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.மேலும் 2 நாள்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment