Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 14, 2020

"மக்களே உஷார்" தொடர்ந்து பல மணி நேரம் கம்ப்யூட்டர் திரையை பயன்படுத்துகிறீர்களா?? ஆபத்து உங்களுக்குத்தான்!!


கொரோனா பரவலை அடுத்து வீடுகளில் உள்ள பெற்றோர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் ஆன்லைன் வகுப்புக்களுக்காக தொடர்ந்து பலமணி நேரம் கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்களை உபயோகப்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பல மணி நேரம் டிஜிட்டல் திரைகளை பயன்படுத்தும்போது கண்களுக்கு பாதிப்பு உருவாகலாம் என கண் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இவற்றை பயன்படுத்துவதை தற்போதைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாது என்றாலும் முறைப்படி உபயோகப்படுத்தினால வரும் விளைவுகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 அடி தூரத்திலுள்ள இடத்தை, 20 நொடிகள் பார்க்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வீட்டிற்குள்ளேயே ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும். கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் டிஜிட்டல் வேலைகள் முடிந்தவுடன் கண்களை மூடி ரிலாக்சாக ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் கண்களை மூடி அமர வேண்டும். லேசான உடற்பயிற்சியும் உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கண்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்க உதவும்.

No comments:

Post a Comment